search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் பிரகாஷ்ராஜ்"

    விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

    பெங்களூர்:

    நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

    இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி. மோகன் வெற்றிபெற்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

    தேர்தல் தோல்வி குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘‘தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது’’ என்று கூறி இருந்தார்.

    இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 மாதமாக பெங்களூர் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன்.

    நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேச்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

    இன்னும் 1 வருடத்தில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில் எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி சிறிய அளவில் இருந்து ஆதரவை பெருக்கப் போகிறேன். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். அரசியல் கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ArvindKejriwal #PrakashRaj
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்துவந்த  நடிகர் பிரகாஷ்ராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.



    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்த பிரகாஷ்ராஜ் அவருடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.



    தனது அரசியல் பயணத்துக்கு கெஜ்ரிவால் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, இந்த சந்திப்பு தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.#ArvindKejriwal #PrakashRaj
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் பிரகாஷ்ராஜுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
    சென்னை:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.

    இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.

    இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ், பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக கடந்த ஒன்றாம் தேதி அறிவித்தார். அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று அறிவித்தார்.



    இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜை அரசியலுக்கு வரவேற்றுள்ளார். 
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பேச்சை செயலாக்கி காட்டியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
    வரவுள்ள மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று அறிவித்துள்ளார். #ParliamentElection #PrakashRaj #BengaluruCentral
    பெங்களூரு:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.

    இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.

    கமல்ஹாசன், ரஜினிகாந்த் போல அவர் கட்சி தொடங்குவாரா? என்றும் கேட்கப்பட்டது. ஆனால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அவர் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.



    இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும், விரைவில் தொகுதி பற்றி அறிவிப்பேன் எனவும் கடந்த ஒன்றாம் தேதி அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். எனது புதிய பயணத்தை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
    #ParliamentElection #PrakashRaj #BengaluruCentral
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள் என்றார். #Prakashraj
    சி.ஐ.டி நகரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் ’மறக்க முடியுமா தூத்துக்குடியை’ என்ற தலைப்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    ‘‘ரியல் எஸ்டேட் போல தமிழகம் மாறி வருகிறது. அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. மக்கள் அவர்களை வேண்டாம் என்று முடிவு எடுத்து பல காலங்கள் ஆகிவிட்டது. காது இல்லாதவர்களிடம் பேசுவது வீண். என்னை யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதைப்பற்றி நான் கவலைபட மாட்டேன்.

    தூத்துக்குடியில் நடந்தவற்றையும், நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாட்டு மக்களை அச்சத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அப்படி பயமுறுத்தி ஆள்பவர்களின் முடிவு மோசமானதாக இருக்கும்.



    நான் ஏன் நேரடி அரசியலுக்கு வர மறுக்கிறேன் என்றால் தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. நான் அரசியலில் தான் இருக்கிறேன். ஆனால் அரசியல்வாதியாக இல்லை. சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச நினைக்கிறேன். என்னை போன்றோரின் குரல் மக்களுக்கு தேவை. கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள்’’.

    இவ்வாறு அவர் பேசினார். #Prakashraj #TuticorinShootOut #BanSterlite

    ×